முருகப்பெருமான் துணை
இந்த நூல் முருகப்பெருமானே அரங்கமகானுக்காக கைப்பட எழுதிய நூலாகும்
இதை பக்தியுடன் படிப்பவர்களுக்கு ஞானம் சித்திக்கும்
துறையூர் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு
மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல்
பாகம்: 345 சுவடி வாசித்தளித்தவர்
T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
08.09.2020,
செவ்வாய்கிழமை
ஞானச்சுடரே ஆறுமுக அரங்கா
ஞானிகளை கலியுகத்தில் உருவாக்கவேண்டி
ஞானபண்டிதன் என் சக்தியாக வந்த
ஞானதேசிகனே ஆறுமுக அரங்கனே
அரங்கனே உந்தனுக்கு ஞான அறிவுரை ஆசி
அருளுவேன் சுப்ரமணியப்பெருமான் யானும் இனிதே
வரங்கள் பெற்று மகா சக்திகள் இடத்தில்
வள்ளல் என வல்லமை பெற்று வந்த அரங்கனே
அரங்கனே உந்தன் தர்மம் உலகை ஆளுமப்பா
அரசனே உந்தன் கொள்கை இந்த உலகை வெல்லுமப்பா
வரங்கள் தந்து எந்தன் பலத்தாலே
வையகத்தை சுத்தி செய்ய வந்த தவசியே
தவசியே உந்தனின் தனிப்பெருங் கருணையாலே
தயவுள்ள மக்கள் கூட்டமாக தரணியோர் மாறி
புவனத்தில் தர்மபலம் கூடி இனிதே
புண்ணிய லோகமாகி இந்தகலியுகம் பெருமாற்றம் காணும்
காணவே உந்தனுள் யான் கலந்து இனிதே
கருணைபட கலியுகத்தார் மேல் ஆசிதந்து
ஞானமாக ஞானச்சுடராக பரவி வர
ஞானியே உந்தனால் இந்த அற்புதம் நிகழக்கூடும்
கூடுமப்பா நீயே தலைவனாய் சூட்சுமமாய்
நிலவுலகில் ஞான ஆளுமைக்கு உண்டான சக்தியே
ஞானபண்டிதன் என் சூட்சுமமாக அற்புதம் நிகழ்த்தி
ஞானயுகம் படைத்து உலகமாற்றம் செய்வாய்
7. மாற்றம் செய்ய வந்த நல்யோகியே
மகத்துவம் மிக்க மாதவசியே
ஆற்றலாக உன்னுள் யானிருக்க
அனுகிவருவோரெல்லாம் ஞானிகள் ஆவார் என்பேன்
ஞான அறிவுரை ஆசி முற்றே
-சுபம்
துறையூர் ஓங்காரக்குடில் மூலமாக ஆசான் முருகப்பெருமான் ஆசியால் 20கோடி பேர்களுக்கு மேலாக தொடர்ந்து அன்னதானம் செய்து வருகிறோம். இனிவரும் காலங்களிலும் முருகப்பெருமான் துணையுடன் மேன்மேலும் சிறப்பாக அன்னதானம் செய்வோம்.
– ஆறுமுக அரங்கமகா தேசிகர்.





Visit Today : 41
Total Visit : 96590