#மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் #பாகம்: 339

 முருகப்பெருமான் துணை

இந்த நூல் முருகப்பெருமானே அரங்கமகானுக்காக கைப்பட எழுதிய நூலாகும் இதை பக்தியுடன் படிப்பவர்களுக்கு ஞானம் சித்திக்கும் துறையூர் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு #மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் #பாகம்: 339 சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed., 02.09.2020, புதன்கிழமை 1. உலக துன்பங்கள் போக்கி காக்க உத்தம ஞானியாய் வந்த அரங்கனே கலகமாச்சர்யம் இன பேதங்கள் கடுமையான பேரிடர்களையும் நீக்கி காக்கவந்த 2. வந்தநல் தவசியே ஞானதேசிகனே வாழும் ஞானியே உந்தனுக்கு சுப்ரமணியர் யானும் சிந்தைபட ஞான அறிவுரை ஆசி செப்பிடுவேன் சார்வரி வேங்கை திங்கள் தன்னில் 3. தன்னிலே அரங்கனே கலியுகத்தின் சிறந்த ஞானி தவமோடு கூடிய அரங்கன் தர்மபலமே மண்ணுலகை காத்துவழிநடத்தக் கூடும் மக்களின் மரண துன்பங்களை நீக்கி அருள் புரியக்கூடும் 4.கூடாத அனைத்து எதிர்ப்பு சக்திகளும் குவலயத்தை விட்டு அரங்கன் தர்மத்தால் அகலக்கூடும் ஈடேரும் அரங்கன் நோக்கமும் கொண்டுவந்தநல் ஈடு இணையில்லாத ஞானயுகமாற்றம் 5. மாற்றம் அரங்கன் தொண்டர்படை மூலமும் மாற்றம் அரங்கன் உயர் கொள்கைகள் மூலமும் ஆற்றல்பட சடுதி நிறைவேறும் அண்ணலாய் அரங்கனுக்கு சர்வ ஆக்கமுமாய் 6. ஆக்கமுமாய் ஆறுமுகன் யான் துணைநிற்க அணுவில் அணுவாய் அரங்கன் அனைத்து அசைவுகளையும் தேக்கமின்றி சுப்பன் யான் திடப்படுத்திவர தேசிகனை தொடர்ந்து வரும் மக்கள்கூட்டம் 7. மக்கள் கூட்டமெல்லாம் ஞான கூட்டங்களாகி மண்ணுலகை மாற்றுகின்ற மகாசக்திகளாகி தேக்கமின்றி இந்த கலியுகம் மாற்றம் பெறும் திருவருளை அரங்கனுள் வழங்கி ஆறுமுகன் அற்புதம் நிகழ்த்துவேன் ஞான அறிவுரை ஆசி முற்றே -சுபம்-

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *