மகான் சுப்பிரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் – 469 | 10.01.2021

 முருகப்பெருமான் துணை 

இந்த நூல் முருகப்பெருமானே அரங்கமகானுக்காக கைப்பட எழுதிய நூலாகும்

இதை பக்தியுடன் படிப்பவர்களுக்கு ஞானம் சித்திக்கும் 

துறையூர் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு மகான் சுப்பிரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல்

பாகம் – 469 

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,

10.01.2021, ஞாயிற்றுக்கிழமை 

தர்மசக்தியே அரங்கா போற்றி 

தரணி காத்திடும் தேசிகா போற்றி 

பெருமைமிக்க ஞானயுகம் படைக்க 

பிரணவசக்தியாய் வந்த அரங்கனே போற்றி 

அரங்கனே உந்தனுக்கு ஆறுமுகன்யானும் அருளுவேன் ஞான அறிவுரை ஆசி தன்னை 

வரங்களென உன் சக்தி கூடி வர வையகம் சடுதி பெருமாற்றம் காணுமப்பா அறங்களாக உன் சக்தி உலகமெங்கும்

அடியவர்களாக பரவி உலகமாற்றத்தை 

மாற்றத்தை இனிதே நடத்தும் சக்தியாக

மண்ணுலகம் மாற்றம் கண்டுவர 

ஆற்றல்பட உன்னை தொடர்ந்து வரும் மக்களால்

அகிலம் ஞானயுகம் மாற்றம் பெறும் 

மாற்றம் தரவல்ல மாதவசியாக

மகத்துவம் கூட்டி உன்னையானும் ஆற்றல் பெருக்கி 

ஆறுமுகன் யானும் வருக அப்பனே அரங்கனே 

உன்னை தொடரும் தொண்டர்கள் மூலமே 

மூலமாக கலியுகத்தில் புதுமையும் 

முழுமையான உயர்வுகளும் கண்டு 

காலமதில் சர்வபலம் கூடும் 

கலியுகமே ஞானயுகமாக மாறும் 

மாறுதலை செய்ய வந்த தவசியே 

மகத்துவம் கொண்ட ஞானியே 

ஆறுதலாய் உன் ஆசி தீட்சை 

அகிலத்தார்க்கு வரமாக உயர்த்தக்கூடும் 

கூடுமப்பா உந்தன் தர்மத்தால் 

குவலயமே மேல்நிலைகள் பெற்று 

ஈடேறும் ஞானயுக ஆட்சிக்காலமாக 

இயம்பிய ஞான அறிவுரை ஆசி முற்றே.

– சுபம் – 

ஐயன் வேலவன் அடியினைப் போற்றிட 

வையகம் போற்ற வாழ்வார் நலமே! 

பற்றறுத்த வேலவன் பதத்தை பற்றிட 

நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவன்! 

ஆட்சிதான் மாற்றமும் அருளுவான் வேலனும்

மாட்சிமை மிக்க மக்கள் வாழவே! 

துறையூர் ஓங்காரக்குடில் மூலமாக ஆசான் முருகப்பெருமான் ஆசியால் 20கோடி பேர்களுக்கு மேலாக தொடர்ந்து அன்னதானம் செய்துவருகிறோம். இனிவரும் காலங்களிலும் முருகப்பெருமான் துணையுடன் மேன்மேலும் சிறப்பாக அன்னதானம் செய்வோம்.

– ஆறுமுக அரங்கமகா தேசிகர்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *