Chennai pattinathar Temple Nitya annadanam | annaprasadham scheme commenced | பட்டினத்தார் கோயில் நித்திய அன்னதானம் திட்டம் துவக்கம்
pattinathar Temple Nitya annadanam annaprasadham started
முருகப்பெருமான் துணை
அத்தமும்வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக மெத்தியமாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு கைத்தலைமேல்வைத் தழுமைந் தருஞ்சுடு காடுமட்டே பற்றித்தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே . மகான் பட்டினத்தார் – பொது கவி எண் 13 . ( அத்தம் – செல்வம் ) செல்வமும் வாழ்வும் வீட்டு வாசல் வரையுமே , அன்புள்ள மனைவி தெரு வாசல் வரையே . பிள்ளைகளும் சுற்றத்தாரும் சுடுகாடு வரையும்தான் . நாம் செய்த பாவமும் புண்ணியமும்தான் நம் ஆன்மாவுடன் ( உயிர் ) கூட கார்ந்து வரும் கடவுள் உங்களுக்கு கல்வி , அறிவு , செல்வம் , வாழ்வு , பண்புள்ள மனைவி கொடுத்துள்ளார் . கடவுள் கொடுத்த செல்வத்தைக் கொண்டு மேன்மேலும் புண்ணியம் செய்ய வேண்டும் . அப்படி செய்யாமல் விட்டுவிட்டால் அது கடவுளின் குற்றமில்லை . உங்களின் குற்றமே ! நரை , திரை , முதுமை வருவது இயல்பே . நாம் செய்யும் புண்ணியங்களுக்கு நரை , திரை , மூப்பு அழிவு இல்லை . இதை அறிந்து செய்பவர்கள் புண்ணியவான்கள் . சென்னையில் மகான் பட்டினத்தார் கோயில கொண்டுள்ளார் . சென்னை மக்களின் நன்மைக்காகவும் , சென்னை நகரில் உள்ள ஆயிரக்கணக்கான புண்ணியவான்களுக்கு அருள் செய்யவே மகான் பட்டினத்தார் சென்னை நகரிலே கோயில் கொண்டுள்ளார் . புண்ணியவான்களுக்கு மட்டுமே மகான் பட்டினத்தார் சன்னதி சென்று வழிபட வாய்ப்பு கிடைக்கும் . சென்னை நகரம் கடற்கரை ஓரமாக உள்ளது . கடல் கொந்தளிப்பால் சென்னை நகரம் அழியாமல் இருப்பதற்கு காரணம் , தாயினும் கருணையுள்ள மகான் பட்டினத்தார் கருணையால்தான் . மரணத்தை வென்ற மகான் பட்டினத்தார் முற்றுப்பெற்ற முனிவராவார் . மகான் பட்டினத்தார் சென்னை நகரத்திற்கு ஒரு பாதுகாப்பு அரண் . மகான் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி தாயுமானார் ! நமக்கு தந்தையுமானார் ! வெம்பந்தம் தீர்த்து உலகுஆள் வேந்தன் திருஞான சம்பந் தனையருளால் சாருநாள் எந்நாளோ .
ஏரின் சிவபோகம் இங்குஇவர்க்கே என்னஉழ வாரம்கொள் செங்கையர்தாள் வாரம்வைப்பது எந்நாளோ ? பித்தர்இறை என்றுஅறிந்து பேதைபால் தூதுஅனுப்பு வித்த தமிழ்ச்சமர்த்தர் மெய்புகழ்வது எந்நாளோ ? போதவூர் நாடுஅறியப் புத்தர்தமை வாதில்வென்ற வாதவூர் ஐயன்அன்பை வாஞ்சிப்பது எந்நாளோ ? ஓட்டுடன்பற்று இன்றி உலகைத் துறந்தசெல்வப் பட்டினத்தார் பத்ரகிரி பண்புஉணர்வது எந்நாளோ ? * கண்டதுபொய் என்றுஅகண்டா காரசிவம் மெய் ‘ எனவே விண்டசிவ வாக்கியர்தாள் மேவுநாள் எந்நாளோ ? சக்கர வர்த்தி தவராச யோகியெனும் மிக்கதிரு மூலன்அருள் மேவுநாள் எந்நாளோ ? கந்தர்அநு பூதிபெற்றுக் கந்தரநு பூதிசொன்ன எந்தை அருள்நாடி இருக்குநாள் எந்நாளோ ? எண்ணரிய சித்தர் இமையோர் முதல்ஆன பண்ணவர்கள் பக்தர்அருள் பாலிப்பது எந்நாளோ ? 1 . 2 . 3 . 4 . 5 . 6 . 7 . 8 . 9 . 10 . மகான் தாயுமானசுவாமிகள் – அடியார் வணக்கம் . முக்காலம் உணர்ந்த முனிவராம் பட்டினத்தார் தக்கதொரு காலமதில் தான் செய்வார் உபதேசம் . ஈசனாம் பட்டினத்தார் இணையடி போற்றிட ஆசானாக நமக்கே அருள்வார் உபதேசம் . பற்றற்ற பட்டினத்தார் பதமலர் போற்றிட நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவன் . அம்மை பட்டினத்தார் அருளினைப் போற்றிட நம்மையும் காத்து நாட்டையும் காப்பாரே ! வளமாம் சென்னை நகர் வாழுகின்ற மக்களுக்கு நலமாம் வாழ்வளிப்பார் நாளும் பட்டினத்தார் ! அருளாளர் பட்டினத்தார் அருளினைப் போற்றிட இருளெல்லாம் விலகி வாழ்வில் இன்பம் உண்டாம் . பற்றில்லா பட்டினத்தார் பதமலர் போற்றிட பற்றற்ற வாழ்வும் பரகதியும் கூடுமே . ஆற்றலாம் பட்டினத்தார் அருளினைப் போற்றிட ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம் . சென்னை வாழ் பட்டினத்தார் திருவடி போற்றிட அன்னையாக நமக்கே அருள்வார் நலமே . அன்னையாம் சென்னைநகர் அகிலம் போற்றும் தன்னையே அர்ப்பணிக்கும் தாயாம் தலைநகர் . ஓரைந்தும் ஐந்தும் ஓதிய புகலுரை ஈரைந்தாய் எனக்கே இயம்பினார் ஆசானே . – ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் .
பட்டினத்தார் கோயில் நித்திய அன்னதானம் துவங்கப்பட்டது ஓங்காரக்குடில்
துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்
நிறுவனர் மற்றும் முருகப்பெருமானின் #கல்கி அவதாரம் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளின் கருணையால் #சென்னை பட்டினத்தார் பட்டினத்தார் திருக்கோவிலில் நித்ய #அன்னதானம் துவங்கப்பட்டுள்ளது
pattinathar Temple Nitya annadanam, annaprasadham commenced, பட்டினத்தார் கோயில் நித்திய அன்னதானம், துவங்கப்பட்டது, ஓங்காரக்குடில் அன்னதானம், ஶ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், Sri agathiar sanmarga charitable trust, NGO in Chennai, Ongarakudil arumuga Arangar, tamil nadu, provide meal to devotees,annadhanam scheme, telugu news, annadanam scheme, nitya annadanam scheme, nitya annadanam trust, temple annadanam scheme
சென்னை இந்த கலியுக #பிரளயம் கடல் மூலம் வரும் #பேரழிவில் இருந்து தப்பித்துக்கொள்ள மகான் பட்டினத்தார் கருணை காட்ட வேண்டும்
சிவஞானிகள் புண்ணியம் செய்பவருக்கு மட்டுமே அருள் செய்வதால்