மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம்: 569

 முருகப்பெருமான் துணை 

இந்த நூல் முருகப்பெருமானே அரங்கமகானுக்காக கருணைக்கொண்டு கைப்பட எழுதிய நூலாகும் இதை பக்தியுடன் படிப்பவர்களுக்கு #ஞானம் சித்திக்கும் என்பது #சத்தியம் சத்தியம் சத்தியம் 

துறையூர் #ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு

மகான் #சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம்: 569 

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed., 

20.04.2021, #செவ்வாய்கிழமை 

ஓங்காரமே உயர் ஞானமே 

#ஓங்காரக்குடில் படைத்து அருளுகின்ற 

#ஓங்காரன் என் சூட்சுமமே தவயோகமே

ஓங்கார ஞானியே உந்தனுக்கு சுப்ரமணியர் யானும் 

2. யானும் ஞான அறிவுரை ஆசி தன்னை

உலகமக்கள் பயனுற எடுத்துரைப்பேன் 

தானதர்ம #சக்தி கூடிய மக்களெல்லாம்

தரணியில் ஞானிகளாகும் #வாய்ப்பு உண்டென உபதேசித்து 

3. உபதேசித்து உண்மை ஞானம் காட்டுகின்ற 

உன்நெறியே உலகை மாற்றும் நெறியப்பா 

அபயமென உன்னை #மக்கள் சரணடைந்துவிட்டால் 

அழிவென்பது இந்த கலியில் அவர்கட்கு இல்லை என்பேன் 

என்கவே பேரிடர் காலம் என்று தவித்து 

இங்கும் அங்கும் அலைந்து பாதுகாப்பு தேடி 

#துன்பம் காணும் கலியுக மக்களே 

தேசிகனெனும் மகா சக்தியை உலக நலம் கருதி 

உலகநலம் கருதி #ஆறுமுகன் அனுப்பியுள்ளேன் 

உகந்தபடி அவன் #திருவடி பற்றிவிட்டால் 

ஞானமாக கலியில் பெரும் பாதுகாப்பு 

நச்சுக்கிருமியையும் வெல்லும்  மகாசக்தியாக உண்டாகும் 

ஆகவே #அரங்கன் திருவடி உயர் திருவடி ஆறுமுகன் என் அருளும் 

ஆசியும் பாதுகாப்பும் நிறைந்த மலரடி பற்றி மகாமந்திர #தீட்சை ஏற்று 

மகான் உன்னை சரணடைந்தேன் என மிகையாக மக்கள் அரங்கன் வழி வந்துவிட்டால்

மண்ணுலகை ஆட்டி வதைக்கும் #பேரிடர் துன்பம் அகன்றோடும் 

பேரிடர் துன்பம் அகன்றோடி எங்கும்

பெரும் பாதுகாப்பும் #இயற்கை பாதுகாப்பு 

வறுமை பற்றாத வளமான சூழல் 

வையகமே #ஞானிகள் ஆளுமைக்கு உரியதாகி 

ஆகியே ஞான ஆட்சிக்காலமும் 

அரங்கன் வழிவழி #தொண்டர் மூலம் 

அகிலம் மாற்றம் கண்டு சிறப்புறும் 

அறிவித்த ஞான அறிவுரை ஆசி முற்றே 

-சுபம்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *