30.08.2020 மகான் #அப்பூதி அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

 முருகப்பெருமான் துணை

மகான் #அப்பூதி அருளிய தவ பிரசன்ன ஆசி நூல் சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், MA, B.Ed, 30.08.2020, ஞாயிற்றுக்கிழமை 1. கருணைக் கடலே அரங்க ஞானியே கலிகால சிக்கலை போக்கிட ஆறுமுக அவதாரமான தவசியே அகிலமதில் உன் தவபலம் மெச்சி 2.மெச்சியே தவபிரசன்ன ஆசி மொழிகுவேன் சார்வரி யாளி திங்கள் அச்சமிலா முன்னான்கீர் திகதி கதிர்வாரம் (சார்வரி வருடம் ஆவணி மாதம் 14ம் நாள், 30.08.2020 ஞாயிற்றுக்கிழமை) அருளுவேன் அப்பூதி அடிகள் யானும் 3. யானும் உலக நலமுற உரைப்பேன் உயர்வான அன்னதான நெறியை ஞானமாக தானமாக மக்களிடை ஞான தேசிகன் பரப்பி வருக 4. வருகின்ற இந்த மார்க்கத்தை வணங்கி மக்கள் ஏற்று தருகின்ற பொருளுதவி சேவையோடு தன்னார்வ தொண்டு பெருக்கிவர 5.வருகவே எல்லா மக்களிடை வரமாக ஆறுமுகன் ஆசி பெருமைபட வந்தடைந்து மாற்றம் பேருலகே பாதுகாப்பு காண்கும் 6. காண்கவே தருமவான்கள் மிகுதிபட கலியுகம் ஞான சக்தி மிக்க ஆன்மீகம் நிறைந்த ஞானயுகமாகி ஆறுமுகனார் ஆளுமை மலரக் கூடும் 7. கூடாத சர்வமாச்சர்யங்களும் குவலயத்தை விட்டு ஓடவே தடையற அரங்கன் காட்டும் தண்டாயுதன் வழிபாட்டுக்கு வர வேண்டும் 8.வேண்டியே சரவணச் சுடரேற்றி விடாது ஞானிகள் பூசை கலந்து தொண்டர்களாகி மக்கள் வர திருவருளாக அரங்க ஞானி அருள் 9. அருள்கிட்டி பெரும் பேறும் அழியாமை ஞானமும் கை கூடும் இருள் எனும் தீவினை விலக ஏழாம் படைவீட்டுக்கு வந்து 10. வந்துமே சடாட்சர தீட்சைதன்னை வணங்கி மக்கள் வருக சிந்தை தெளிவுடன் மாற்றமும் சிறப்பறிவும் கூடி உலகோர் சிறப்பர் 11. சிறப்பான சுத்த சன்மார்க்க சைவ நெறியே ஞானயுகம் படைக்கும் மறுப்பின்றி அரங்கமகானை தொடர #மாற்றம் உலகம் சடுதி காணும் தவபிரசன்ன ஆசி முற்றே -சுபம்-https://youtu.be/_OmNp2dYRUAAbout The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *