பாகம்: 337 மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல்

முருகப்பெருமான் துணை 

துறையூர் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு 

மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல்

பாகம்: 337 

சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், M.A., B.Ed.,

31.08.2020, திங்கட்கிழமை 

ஞானத்தின் சக்தியே ஆறுமுக அரங்கா

ஞானிகள் துணைமிகுந்த ஞானதேசிகா 

ஞானபண்டிதன் யானும் உந்தனுக்கு

நாட்டிடுவேன் ஞான அறிவுரை ஆசி 

ஆசிதனில் #அரங்கன் தொடர்பு கொண்ட

அகிலமே அழியாமை பெறக்கூடும்

ஆசிபெற்ற அரங்கன் தர்மபலம்

ஐயமற ஏற்ற அகிலமே மாற்றம் பெறும்

மாற்றம் தந்து அரங்கன் சக்திக்குள்ளே

மகத்துவம் கூட்டி வடிவேலன் யானருள்

ஏற்றம் கருதிவரும் தொண்டர்களெல்லாம்

ஏழாம்படைவீட்டின் மூலம் மாற்றம் பெறுவர் 

மாற்றம் தரும் கலியுகத்தின் ஞானி

மாதவசியே தர்மத்தின் காவலன்

ஏற்று அரங்கன் தர்மத்தை தொடர

இந்த உலகமே மாற்றம் பெறக்கூடும்

கூடுமே அரங்கன் சைவ நெறிவழி

குவலயமே பாதுகாப்பை பெறும் 

நாடெங்கிலும் அன்னதான சூட்சுமம் 

நன்மைகருதி ஞானமாக பரவி வர 

வருகவே இந்த சக்தியின் வழி 

வடிவேலன் எங்கும் சூட்சுமமாக பரவி 

தர்மத்தை நிலை நாட்டி யுகத்தில் 

தர்மஞான யோக ஆட்சிதந்து அருள்புரிவார் 

அருளவே ஞான ஆட்சிக் காலம் 

அரங்கன் கொள்கை பரவவே நடக்கும் 

அருளவே ஞானிகளின் துணைகொண்ட காலம் 

அரங்கன் கொள்கை வளரவே நடந்தேறும் 

நடந்தேற ஆறுமுகப் பெருமான் யான் 

ஞானச்சுடராக அரங்கனுள் இருக்க 

தடையின்றி உலகோர் பிரணவக்குடிலை 

தட்டாது தொடர்ந்து வருதல் வேண்டும் 

வேண்டி அரங்கன் ஆசிபெற்று 

விடாது தீட்சை பூஜை தொடர்ந்து 

தொண்டுவழி கலந்து தர்மத்தை 

தடைபடா தொடர வேண்டும்

வேண்டி வேண்டி செய்து வருக

வேலவன் சக்தி வெளிப்பட்டு 

தொண்டுவழியே உலகமாற்றம் 

தேசிகன் தலைமையில் நடந்தேறக்கூடும் 

ஞான அறிவுரை ஆசி முற்றே

– சுபம்

துறையூர் ஓங்காரக்குடில் மூலமாக ஆசான் முருகப்பெருமான் ஆசியால் 20கோடி பேர்களுக்கு மேலாக தொடர்ந்து அன்னதானம் செய்து வருகிறோம். இனிவரும் காலங்களிலும் முருகப்பெருமான் துணையுடன் மேன்மேலும் சிறப்பாக அன்னதானம் செய்வோம்.

– ஆறுமுக அரங்கமகா தேசிகர்

https://youtu.be/yh9CZMF79YE

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Our YOuTube Channel

Annadhanam Channel

Olai chuvadi Channel

Lucky Persons


Warning: Undefined array key "yesterday_view" in /home/u795943423/domains/ongarakudil.co.in/public_html/wp-content/plugins/mechanic-visitor-counter/wp-statsmechanic.php on line 149

Warning: Undefined array key "month_view" in /home/u795943423/domains/ongarakudil.co.in/public_html/wp-content/plugins/mechanic-visitor-counter/wp-statsmechanic.php on line 150

Warning: Undefined array key "year_view" in /home/u795943423/domains/ongarakudil.co.in/public_html/wp-content/plugins/mechanic-visitor-counter/wp-statsmechanic.php on line 151

Warning: Undefined array key "hits_view" in /home/u795943423/domains/ongarakudil.co.in/public_html/wp-content/plugins/mechanic-visitor-counter/wp-statsmechanic.php on line 153

Warning: Undefined array key "totalhits_view" in /home/u795943423/domains/ongarakudil.co.in/public_html/wp-content/plugins/mechanic-visitor-counter/wp-statsmechanic.php on line 154

Warning: Undefined array key "online_view" in /home/u795943423/domains/ongarakudil.co.in/public_html/wp-content/plugins/mechanic-visitor-counter/wp-statsmechanic.php on line 155
0079278
Visit Today : 5
Total Visit : 79278